கிறிஸ்துமஸ் கீத பவனி:-
நாள் 1:
டூவிபுரம் தூய யாக்கோபு ஆலய கிறிஸ்துமஸ் கீத பவனி டிசம்பர் 2ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆலய வாலிபர்கள், சபை மூப்பர்கள், சபை ஊழியர்கள் மற்றும் சபையோர் அனைவரும் கலந்து கொண்டனர். கிறிஸ்துமஸ் வாழ்த்து கூற வந்த கிறிஸ்துமஸ் தாத்தாவை அணைந்து சபை மக்களும் மிகவும் ஆவலுடன் வரவேற்றனர். ஆலயத்தில் இருந்து புறப்பட்ட கிறிஸ்துமஸ் தாத்தா சேகர குரு இல்லம் முதல் ஆலய வளாகம், புதுக்கோட்டை, கோரம்பள்ளம், சொரிஸ்புரம், ஸ்பிக் நகர், மறவன்மடம் ஆகிய இடங்களுக்கு சென்று கிறிஸ்துமஸ் கீத வாழ்த்து கூறப்பட்டது.

