தூய யாக்கோபு ஆலயம் (St. James Church) என்பது
தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள
ஒரு பழமையானதும், உயிர்ப்புள்ளதுமான கிறிஸ்தவ ஆலயமாகும்.
இந்த ஆலயம் இயேசு கிறிஸ்துவின் அன்பு, கருணை மற்றும் இரட்சிப்பு செய்தியை
எல்லா மக்களுக்கும் அறிவிக்கவும்,
ஆவிக்குரிய வளர்ச்சிக்கும், சமுதாய நலனுக்கும் சேவை செய்யவும் நிறுவப்பட்டது.
எங்கள் சபை
எங்கள் ஆலயத்தில் 740-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இணைந்து
ஒரே மனமும், ஒரே விசுவாசமும் கொண்டு தேவனை ஆராதித்து வருகின்றனர்.

சிறுவர் ஊழியம்
👉 சிறுவர் ஊழியம் மூலம் குழந்தைகள் தேவனுடைய வார்த்தையை அறிந்து, நல்ல குணநலன்களுடன் வளர வழிகாட்டப்படுகின்றனர்.

வாலிப ஆண்கள் ஐக்கிய சங்கம்
👉 வாலிப ஆண்கள் ஐக்கிய சங்கம், இளைஞர்களை தேவனுடைய வழியில் நடத்தி, நல்ல முன்னுதாரணங்களாக உருவாக்கும் சேவையாகும்.

வாலிப பெண்கள் ஐக்கிய சங்கம்
👉 இளம் பெண்கள் ஆன்மீகத்திலும் வாழ்க்கை மதிப்புகளிலும் வளர உதவும் ஊழியம்.

ஆலய பாடகர் குழு
👉 தேவனை மகிமைப்படுத்தும் பாமாலை & கீர்த்தனை பாடல்கள் மூலம் தேவனை ஆராதனைக்கு செய்யும் ஊழியம்.

ஆண்கள் ஐக்கிய சங்கம்
👉 ஆண்கள் ஆன்மீக வளர்ச்சி மற்றும் சபையின் ஊழிய வளர்ச்சிக்கு ஈடுபட உதவும் ஆண்கள் ஐக்கிய சங்கம் .

பெண்கள் ஐக்கிய சங்கம்
👉 பெண்கள் விசுவாசத்தில் வலுவடைந்து, குடும்பம் மற்றும் சமுதாயத்தில் சேவை செய்ய உதவும் ஊழியம்.

TNDTA நடுநிலைப்பள்ளி
👉 மாணவர்களுக்கு தரமான கல்வி மற்றும் நல்ல ஒழுக்கத்தை வழங்கும் கல்வி நிறுவனம்.

TCMA பாடகர் குழு
👉 தேவனை மகிமைப்படுத்தும் சிறப்பு பாடல்கள் மூலம் தேவனை ஆராதனை செய்யும் ஊழியம்.

இணையதள ஊழியம்
👉 இணையத்தின் மூலம் தேவனுடைய வார்த்தை மற்றும் ஆலய தகவல்களை உலகமெங்கும் பகிரும் ஊழியம்.

