👉 தூத்துக்குடி மாவட்டம், டூவிபுரம் தூய யாக்கோபு ஆலயத்தின் ஆண்கள் ஐக்கிய சங்கத்தின் மூலம், ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுலம் மாவட்ட பகுதியில் நடைபெற்ற ஆலய பிரதிஷ்டை மற்றும் பணித்தள பார்வை ஊழியத்தில் பங்கேற்க கர்த்தர் கிருபை செய்தார். இதற்காக கர்த்தருக்கு நன்றி செலுத்துகின்றோம்.
👉 இந்த ஊழியத்திற்காகவும், இதில் பங்கேற்ற ஆண்கள் ஐக்கிய சங்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காகவும் ஜெபிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
👉 மேலும், எதிர்காலத்தில் நமது டூவிபுரம் சேகர குடும்பங்கள் மூலம் இதுபோன்ற பல ஆலயங்கள் கட்டுவதற்கான தேவனுடைய திட்டங்கள் நிறைவேறிட ஜெபிப்போம்.
👉 இந்த ஆலயத்தை கட்டி வழங்கிய திரு. எபனேசர் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
🙏 ஜெப விண்ணப்பங்கள்:
👉 தரிசு நிலங்கள் அனைத்தும் பலன்கொடுக்க வேண்டுமே
👉 வேத வசன விதைகள் எங்கும் விதைக்கப்படவேண்டுமே
👉 தீர்க்கதரிசனம் உரைக்கப்படவேண்டும்
👉 தேவ வாக்குத்தத்தங்கள் நிறைவேற வேண்டும்


