கிறிஸ்துமஸ் கீத பவனி: நாள் 5:-

கிறிஸ்துமஸ் கீத பவனி:-
நாள் 5:
டூவிபுரம் தூய யாக்கோபு ஆலய கிறிஸ்துமஸ் கீத பவனி டிசம்பர் 8-ம் தேதி சிறப்பாக நடைபெற்றது. சேகர குருவானவர் கிறிஸ்துமஸ் கீத பவனியை துவக்கி வைத்தார். ஆலயத்தில் இருந்து புறப்பட்ட கிறிஸ்துமஸ் தாத்தா,H.B காலனி எட்டையாபுரம் ரோடு, முத்துகிருஷ்ணாபுரம், ஸ்டேட் பாங்க் காலணி, சுந்தரவேல்புரம், KTC நகர், T. சவேரியார் புரம், பவிஸ்ரீ நகர், கிருஷ்ணாஜபுரம், பூபாலராயபுரம் பகுதிகளில் உள்ள நமது சபையினரின் இல்லங்களுக்குச் சென்று வாழ்த்து கூறினார். இதில் சபை மூப்பர்கள், வாலிபர்கள், சபை ஊழியர்கள் மற்றும் சபையோரும் கலந்து கொண்டனர். கிறிஸ்துமஸ் வாழ்த்து கூற தங்களது இல்லங்களுக்கு வந்த கிறிஸ்துமஸ் தாத்தாவை சபை மக்கள் மிகவும் ஆவலுடன் வரவேற்றனர்.
கீத பவனியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சபை மக்கள் தேநீர், முறுக்கு, பிஸ்கட், ஸ்வீட்ஸ்,ஸ்நாக்ஸ் கொடுத்து உற்சாகப்படுத்தினார்கள். இரவு உணவுடன் கீத பவனி நிறைவுற்றது. எல்லா துதியும் கனமும் மகிமையும் இயேசு ராஜாவுக்கே உரித்தாகுக.

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *